தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை பெற்றுத்தரப்படும்' - புதிய விழுப்புரம் கலெக்டர் உறுதி - villupuram collector annadurai IAS

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப் படுமென்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆ. அண்ணாதுரை உறுதியளித்துள்ளார்.

Sugarcane farmers receive a balance, says new collector of villupuram

By

Published : Nov 18, 2019, 11:17 AM IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த இல. சுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு தேர்தல் ஆணையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த ஆ. அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாதுரை, "விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டம், கல்வி மேம்பாடு, ஊரக வளர்ச்சித் திட்டம், மாவட்டத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ்நாடு அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முயற்சிப்பேன். மாவட்ட மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். கல்வி மேம்பாடு, விவசாயம் போன்ற திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை, வருவாய் வசூல் திட்டத்தின் கீழ், வசூலிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் மத்திய அரசின் நடுவர் தீர்ப்பாயத்தின் மூலம் விவசாயிகளின் நிலுவைத் தொகையை தமிழ்நாடு அரசின் ஆலோசனைப்படி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகையாளர்கள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தப்படும்" என்றார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பேட்டி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள அண்ணாதுரைக்கு, அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியில் ஆணி பிடுங்கும் திருவிழாவை முன்னெடுத்த இளைஞர்கள் குழு..!

ABOUT THE AUTHOR

...view details