விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை ரூ. 40 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ஐந்தாயிரமாக நிர்ணயம் செய்யக்கோரியும், 2017-18ஆம் ஆண்டுக்கான கரும்பு பயிருக்கான காப்பீட்டு அனைவருக்கும் வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் இன்று (செப்டம்பர் 5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிலுவைதொகை - கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.