தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகமூடி அணிந்து அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை: திண்டிவனம் அருகே பரபரப்பு - திண்டிவனம் அருகே அடுத்தடுத்து அரங்கேரும் கொள்ளை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து அரங்கேரும் கொள்ளை
திண்டிவனம் அருகே அடுத்தடுத்து அரங்கேரும் கொள்ளை

By

Published : Apr 19, 2021, 11:52 AM IST

Updated : Apr 19, 2021, 12:10 PM IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலைய சரகம், காமராஜ் நகர், மரக்காணம் ரோடு, பகுதியில் வசிக்கும் பிலவேந்திரன் (53) என்பவர், வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபொழுது இன்று (ஏப்.19) அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க மூன்று நபர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு கையில் கத்தி, இரும்பு ராடு, கைத்துப்பாக்கி வைத்துக் கொண்டு, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை

அப்போது, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் எழுந்த நிலையில், பிலவேந்திரனின் முதுகில் ராடால் தாக்கி, அவரது மகன் அருண்குமார் (31) அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை கழற்ற சொல்லி வாங்கிக் கொண்டு, அங்கிருந்து பதிவு எண் இல்லாத மஹிந்திரா XUV 500 வெள்ளைநிற வாகனத்தில் மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். தற்போது பிலவேந்திரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மைலம் காவல் நிலைய எல்லை கன்னிகாபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ஞானசேகரன் என்பவருடைய வீட்டினுள், நான்கு நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கையில் கத்தி, இரும்பு பைப்புடன் சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து சத்தம் போட்டதைத் தொடர்ந்து நால்வரும் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், இந்த பதிவு எண் இல்லாத மஹிந்திரா XUV 500 காரை பறிமுதல் செய்து, சம்பவம் தொடர்பாக எஸ்.பி ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு

Last Updated : Apr 19, 2021, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details