திண்டிவனம் அடுத்த காட்டு சிவிறி கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன்(39). இருளர் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது மகன் காட்டுசிவிரி உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை மற்ற மாணவர்கள் சாதி பெயரால் அழைத்து வந்துள்ளனர். இதனால் மாணவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மாணவர் சுந்தரராஜனின் தந்தை கூறிய தகவலானது, நேற்று(மே.09) எங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டு கொட்டகை அருகில் நின்று கொண்டிருந்த பாலமுருகன், திவாகர், கிஷோர்,மூன்று பேரும் முன் விரோதம் காரணமாக என் மகனை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி அந்தப் பகுதியில் எரிந்து கொண்டிருந்த சவ நெருப்பில் தள்ளி விட்டனர்.
ஆறாம் வகுப்பு மாணவரை தாக்கி தீயில் தள்ளிய சக மாணவர்கள் இதனையடுத்து சக மாணவர்களால் தாக்கப்பட்டு நெருப்பிலிருந்து எழுந்த என் மகன் அருகில் உள்ள தண்ணீர் டேங்க் அருகில் சென்று தண்ணீரில் உருண்டு புரண்டு தீயை அணைத்து விட்டு வீட்டுக்கு ஓடி வந்துள்ளான்.
தகவல் அறிந்து வீட்டுக்கு சென்ற நான் என் மகன் முதுகில் தோள்பட்டை, கை ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதை கண்டு திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளேன் என தெரிவித்தார். மாணவன் தீயில் தள்ளப்பட்ட சம்பவம் விழுப்புரம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Honour Killing: ஹைதராபாத்தை உலுக்கிய ஆணவக் கொலை சம்பவத்தில் இருவர் கைது!