விழுப்புரம்: கரோனா ஊரடங்கு காலத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவை செயல்படாது என அரசு அறிவித்திருந்தது. அதன் பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து, விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவை செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், விழுப்புரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் நீச்சல் குளம் திறக்கப்படாமலேயே உள்ளது.
இது குறித்து மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் பேசுகையில், "நீச்சல் குளத்தில் உள்ள குளியலறை, நீச்சல் குளத்தின் இதர பிற பகுதிகள் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளன. அவற்றைச் சீரமைக்கும் பணிகள் உள்ளதால் நீச்சல் குளம் திறக்கப்படவில்லை” என்றார்.