விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கூகையூர் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 2018ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மணவர்களுக்கு இன்னும் இலவச லேப் டாப் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், லேப்டாப் வழங்காததை கண்டித்து பள்ளி மணவர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச லேப்-டாப் வழங்க வேண்டும் என மானவர்கள் கோஷமிட்டனர்.
மடிக்கணினி வழங்காததை கண்டித்து மாணவர்கள் போரட்டம் - free laptop
விழுப்புரம்: சின்ன சேலம் அருகே இலவச மடிக்கணினி வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடிக்கணினி வழங்காததை கண்டித்து மாணவர்கள் போரட்டம்
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அலுவலர்கள் மாணவர்களிடம் சமாதான பேச்சு வர்த்தை நடத்தினர். இருப்பினும், அதை ஏற்காத மாணவர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு போரட்டத்தை கைவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் லேப்டாப் வழங்காததை கண்டித்து மணவர்கன் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.