தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவிகளின் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை, கடலூர், கோவை, குமரி ஆகிய பகுதிகளிலிருந்து 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்திய மாணவர் சங்கம் சார்பாக மிதிவண்டிப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டனர்.
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி - Awareness Rally on Education
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில் அரசுப் பள்ளிகளை பாதுகாக்கவும், நீட் தேர்வுக்கு எதிராகவும், மிதிவண்டிப் பரப்புரைப் பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Students Creating Awareness on Education
இம்மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கெடிலத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் இளநீர், மோர், உள்ளிட்ட குளிர்பானங்கள் கொடுத்தும் மலர்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ஏராளமான மாணவர்களும் கலந்துகொண்டனர்.