விழுப்புரம்: இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, திமுக எம்.பி., ஆ.ராசாவைக் கண்டித்து, புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு, இந்து முன்னணி அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
புதுவையில் முழு கடை அடைப்பு காரணமாக பேருந்துகள் நிறுத்தம் - பொதுமக்கள் கடும் அவதி! - பேருந்து
இந்து முன்னணியின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் வில்லியனூரில் உடைக்கப்பட்டதால் அரசு பேருந்துகளும் கூட நிறுத்தப்பட்டுள்ளன.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ஓரிரு அரசு பேருந்துகளும், புதுச்சேரி மாநில எல்லையான மதகடிப்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வழக்கமாக செல்லும் நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.