விழுப்புரம் மாவட்ட அதிமுக மரக்காணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிவர்மனின் இல்ல விழாவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய ஈபிஎஸ், “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது, மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பாதிப்புகளை சரி செய்வதற்காக என்னை பொறுப்பாளராக நியமனம் செய்தார்.
நான் 15 நாட்களாக இப்பகுதியில் சுற்றிச்சுற்றி பொது மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளைச் செய்தேன். அப்போது எனக்கு உதவியாக இருந்தவர், ரவிவர்மன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் பல இன்னல்களுக்கு உள்ளாகி, அதிமுகவை வழி நடத்தி வெற்றி பெற்றவர்கள். அவர்களைப் போன்று நாமும் உறுதியாக வெற்றி பெறுவோம்.
எட்டப்பர்களை வைத்து எங்களை வீழ்த்தி விடலாம் என நினைக்காதீர்கள் ஸ்டாலின்! - ஈபிஎஸ் பேச்சு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்போம். தற்பொழுது தான் தெரிகிறது, நம்முடன் இருந்த சில எட்டப்பர்களால் தான் நாம் அந்த வாய்ப்பை தவற விட்டோம் என்று. நம்முடைய கட்சியை பிளவுபடுத்த நினைத்த எட்டப்பர்களின் முகமூடி கிழிக்கப்பட்டு, தற்போது கட்சியை விட்டே வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். எங்களுடன் இருந்த எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்தி விடலாம் என்று நினைத்துக் கூட பார்க்காதீர்கள். அதிமுக என்பது எஃகு கோட்டை; உழைப்பால் வளர்ந்த கட்சி” என கூறினார்.
இதையும் படிங்க:ஓபிஎஸ்சிடம் இருந்து எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி பறிப்பு; எடப்பாடியின் அடுத்த அடி