விழுப்புரத்தில் நடைபெற்ற எஸ்ஆர்எம்யூ கூட்டத்தில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கண்ணையா கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் எஸ்ஆர்எம்யூ நிர்வாகிகள், தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ரயில்வேயை தனியார் மயமாக்கினால் 50 கோடி பேர் பாதிக்கப்படுவர்! - awareness
விழுப்புரம்: ரயில்வே துறையை தனியார் மயமாக்க நினைக்கும் மத்திய அரசின் முடிவால், 50 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணையா, "லாபத்தில் இயங்கும் ரயில்களை தனியாருக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஏழை, பாமர மக்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் என 50 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
இது தொடர்பாக ரயில்வே தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அப்போது எங்கள் பலம் மத்திய அரசுக்கு தெரியும்" என்றார்.