விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரசு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று (ஜூன் 7) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியம், "தமிழ்நாட்டில் கறுப்புப் பூஞ்சை நோயால் இதுவரை 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசிடமிருந்து கறுப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 30 ஆயிரத்திற்கும் அதிகமான மருந்து தேவை என கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்து 60 எண்ணிக்கையிலான மருந்து அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதத்தை அரசு குறைத்துக் காட்டவில்லை. அதிமுக ஆட்சியில் தான் இறப்பு விகிதம் குறைத்துக் காட்டப்பட்டது" எனத் தெரிவித்தார்.