தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில தலைவர் கு. பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கோ.பாலசுப்பிரமணியன், "டாஸ்மாக் கடைகளில் ஒரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மேலாளர் பிற மாவட்டத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் முறையற்ற ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் துணை பொதுமேலாளர் ஜோதிசங்கர் பணியாளர் விரோதப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதை கண்டிக்கின்றோம்.