தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து! - பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து

விழுப்புரம்: 10 மற்றும் 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து வசதியினை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Special buses for physically challenged students to their examination
Special buses for physically challenged students to their examination

By

Published : Jun 8, 2020, 10:53 PM IST

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.


இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னை, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 18 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு வெப்பமானி மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பு பேருந்து வசதியின் மூலம் அவர்களது பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details