விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் மாதம் இருமுறை சிறப்பாக பணிபுரியும் காவலர்களை நேரில் அழைத்து, அவர்களின் சிறப்பானப் பணியை பாராட்டி சான்றிதழ் வழங்குவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு! - villupuram
விழுப்புரம்: மாவட்டத்தில் சமூக அக்கறையோடு சிறப்பாக பணியாற்றிய 17 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
அந்த வகையில், கடந்த இரு வாரங்களில் ஆள்கடத்தல், திருட்டுச் சம்பவம், வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய அரகண்டநல்லூர், ரிஷிவந்தியம், பகண்டை, திருக்கோவிலூர், கச்சிராயபாளையம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் என மொத்தம் 17 காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டும், சான்றிதழும் வழங்கினார்.