விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி பகுதியில் கோட்டக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கிவந்த TN 07 AE 8687 என்ற பதிவு எண் கொண்ட சொகுசுக் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் எவ்வித அனுமதியோ, உரிமமோ இன்றி புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் 27 பெட்டிகளில் 648 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரனை (38) கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.