விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, பாலமுருகன் ஆகிய இருவரும், கம்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விழுப்புரம்
அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது சட்டவிரோதமாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கண்டதில், திண்டிவனத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார், சுரேஷ் என்பதும், ரூ.1லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.