கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளில் நடைபயணமாக சென்று பொதுமக்கள், வணிகர்கள் , ஆட்டோ ஓட்டுநர்களிடம் என்ஆர்சி என்பிஆர் சிஏஏ-வுக்கு எதிராக கையெழுத்து பெற்று ஆதரவு திரட்டினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "இந்த பட்ஜெட் நீளமான வெற்றறிக்கை உடையது. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்றுக் கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசின் முடிவு வரவேற்கத்தக்கது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "டி.என்.பி.எஸ்.சி., நீட் தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களும் பொறுப்பேற்காதது வண்மையாக கண்டிக்கதக்கது" என்று கூறினார்.