தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவின் சர்ச்சை கருத்து: குடியரசுத் தலைவருக்கு சிவசேனா கடிதம்! - தொல் திருமாவளவனின் சர்ச்சைக்குரிய கருத்து

விழுப்புரம்: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவனின் எம்.பி. பதவியை ரத்துசெய்ய வேண்டுமென வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட சிவசேனா சார்பில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கு கடிதம்

By

Published : Oct 24, 2020, 3:52 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அண்மையில் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்குத் தமிழ்நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், திருமாவளவனின் கருத்து ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும்விதத்திலும், அவமானப்படுத்தும் வகையிலும், புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளதாகக் கூறி விழுப்புரம் மாவட்ட சிவசேனா சார்பில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

குடியரசுத் தலைவருக்கு சிவசேனா கடிதம்
மேலும் இத்தகைய செயலில் ஈடுபட்ட திருமாவளவனின் எம்.பி. பதவியை ரத்துசெய்ய வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதியின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details