தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sexual harassment case: பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி விழுப்புரம் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக சாட்சியம்

பாலியல் தொந்தரவு (Sexual harassment) கொடுத்த வழக்கில், புகார் அளித்த பெண் எஸ்பி இன்று (நவ.12) இரண்டாவது நாளாக விழுப்புரம் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Sexual harassment case
Sexual harassment case

By

Published : Nov 12, 2021, 7:25 PM IST

விழுப்புரம்:கடந்த அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்குப் பாலியல் தொந்தரவு (Sexual harassment) கொடுக்கப்பட்ட வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி, இருவர் மீதும் விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இரண்டு நாட்களாக அளித்த சாட்சியம்

இந்த வகையில் நேற்று(நவ.11) பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி., விழுப்புரம் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது பெண் எஸ்பி., இரண்டாவது நாளாக வந்து இன்றும் சாட்சியம் அளித்தார்

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகியோர் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் மீண்டும் வழக்கை வருகின்ற நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: புதுச்சேரி: ஏரிகளைப் பார்வையிட்ட தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details