விழுப்புரம்:மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை குழு விழுப்புரம் நகராட்சி பாகர்ஷா வீதி , மகாத்மா காந்தி ரோடு , கிழக்கு பாண்டி சாலையில் உள்ள மாம்பழ குடோன்கள் மற்றும் பழ விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் சுமார் 1.5 டன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த ஆய்வில் 15 கடைகள் மற்றும் 5 குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.