விழுப்புரம்:கடந்த ஒரு வார காலமாக பல்வேறு உரக் கிடங்குகளில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள நான்கு நிறுவனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 டன் யூரியா 65 டன் கலப்பு உரங்களை வேளாண்மைத்துறை பறிமுதல் செய்துள்ளது. அவற்றை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் இணை இயக்குநர், ‘தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கலப்பு உரங்கள் மற்றும் யூரியா போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில் விக்கிரவாண்டி பகுதியில் 4 நிறுவனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த கலப்பு உரங்கள், யூரியா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.