விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேட்டவலத்திலிருந்து வீரப்பாண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த, வீரப்பாண்டி மன்மதன் கோவில் தெருவைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூட்டையில் 37 கிலோ எடைகொண்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.