விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக நேற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் தமிழ் வளர்ச்சி, தொல்வியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக விக்கிரவாண்டி தொகுதியில் சீமான் பேசிய சர்ச்சைக்குறிய கருத்துக்கு சட்டம் தன் கடைமையை செய்யும் என முதலமைச்சரே சொல்லி இருக்கிறார். சீமான் அவ்வாறு பேசியது தவறானது, எனவே அதை அவர் திரும்பப் பெறவேண்டும்.