விழுப்புரம்: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வார்டு மறுவரையறை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
இதனையடுத்து தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான காணொலி இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடக்கம்
அதன்படி அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 74.37 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் தற்போது 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 12 ஆயிரத்து 376 பதவியிடங்களுக்கு இன்று (அக்.9) இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தின் கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள மூன்று வார்டுகளுக்கான இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல், அங்குள்ள சகாதேவன் பேட்டை பாரதி நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்றது.
இதையும் படிங்க:கவிஞர் பிறைசூடன் மறைவு - மு.க.ஸ்டாலின் அஞ்சலி