விழுப்புரம் நகரில் பள்ளி செல்வதற்காக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். அவர்களை பலமுறை மாவட்ட ஆட்சியர் மோகன் கண்டித்தும் தொடர்ந்து மாணவர்கள் பேருந்துகளில் தொங்கியபடியே செல்கின்றனர்.
குறிப்பாக, மாணவிகள் பயணம் செய்யும் பேருந்திலே இது போன்று மாணவர்கள் தங்களை சினிமாக்களில் வரும் ஹீரோக்களைப் போல காட்டிக் கொள்வதற்காக தொங்கியபடி ஆபத்தைத் தேடி செல்வதாக சக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாணவர்கள் இவை போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளுக்கு செய்வதை தவறு என்று உணர்த்த வேண்டும். இவ்வாறு படியில் தொங்கும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரயிலில் கடந்த மே 25ஆம் தேதி ஆபத்தான முறையில் படியில் பயணித்த மாணவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது போன்ற சாகசம் செய்வதாக நினைத்து படியில் தொங்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்த மாணவர்கள் இதையும் படிங்க: Video: ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு