விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. சுமார், 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இங்கு படிக்கின்றனர். இப்பள்ளியில் அறிவியல் பாடத்திற்கு இரண்டு ஆசிரியைகள் பணியாற்றிவருகின்றனர்.
ஆசிரியர் இடமாற்றம்: பள்ளி மாணவர்கள் போராட்டம் - ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து மாணவ,மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
பள்ளி மாணவர்கள்
இந்நிலையில் ஏற்கனவே இப்பள்ளியில் உள்ள நான்கு ஆசிரியர்கள், மாறுதலில் சென்றுவிட்ட நிலையில் இன்று அறிவியல் ஆசிரியர் கலைச்செல்வி என்பவரையும் இடமாற்றம் செய்துள்ளனர்.
இதனைக் கண்டித்து பள்ளி மாணவ - மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி எதிரே அமர்ந்து திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஆசிரியர்கள் இடமாற்றம் கூடாது என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்த பின் மாணவர்கள் கலைந்து வகுப்பறைகளுக்கு சென்றனர்.