விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அயன்குஞ்சரம் பகுதியைச் சேர்ந்த கேசவனின் மகன் சிவக்குமார் (15). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
நேற்று விடுமுறை நாள் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால், அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிவக்குமார், மதியம் 2 மணிக்கு மேல் திடீரென காணாமல்போயுள்ளார். அவரின் பெற்றோர் எங்கு தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை தீவிரமாகத் தேடிவந்தனர்.
காப்புக்காட்டு பகுதியில் சிவக்குமார் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் கொலை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிறுவனின் மரணம் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் கொலை செய்யப்பட்ட இடம்