தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தினகரனிடமிருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும்’ - சசிகலா

விழுப்புரம்: கூவத்தூரில் அனைவருக்கும் மது ஊற்றிக்கொடுத்து குடியை கெடுத்தவர் டிடிவி.தினகரன் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

shanmugam
shanmugam

By

Published : Feb 11, 2021, 3:18 PM IST

விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூபாய் 3 கோடியே 50 ஆயிரம் மதிப்பில் தங்க நாணயம் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "அதிமுக கொடியை முறைகேடாக பயன்படுத்திய சசிகலா மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும். டிடிவி.தினகரன் அதிமுகவை கைப்பற்றி விடுவோம் என வெற்று அறிக்கைகள் விடுகிறார். முதலில், டிடிவி.தினகரனிடம் இருந்து சசிகலா தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ள வேண்டும்.

ஏனென்றால் டிடிவி.தினகரனை நம்பித்தான் கட்சி, ஆட்சி அத்தனையும் ஒப்படைத்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. ஆனால், அதனை ஒரே மாதத்தில் கூத்தாடி கெடுத்து விட்டார். கூவத்தூரில் அனைவருக்கும் மது ஊற்றிக்கொடுத்து குடியை கெடுத்தவர் டிடிவி.தினகரன். அவரால் இல்லை என்று மறுக்க முடியுமா?" என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: அடக்குமுறைச் சட்டங்களைக் கைவிடுங்கள்- வைகோ வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details