தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரியில் மணல் கடத்தல் : வைரல் வீடியோ - villupuram district

விழுப்புரம் : இரவு நேரங்களில் சிலர் லாரிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபடும் காணொலி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லாரியில் மணல் கடத்தல்! வைரல் விடியோ
லாரியில் மணல் கடத்தல்! வைரல் விடியோ

By

Published : Oct 12, 2020, 3:39 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க காவல் துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகேயுள்ள தென்பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் சிலர், லாரிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அந்தப் பகுதியில் உள்ள சிலர் செல்போனில் படம்பிடித்துள்ளனர்.

இந்தக் காணொலி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details