தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் குவாரி அமைப்பதை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு! - petition

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே மணல் குவாரி அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மணல் குவாரி

By

Published : Jun 24, 2019, 11:33 PM IST

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது டி.புதுப்பாளையம், அண்டராயனூர் கிராமங்கள். இந்தப் பகுதிகளில் தற்போது அரசு சார்பில் மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தங்கள் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும் பொது வழிபாட்டு தலம் என்றும், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கூறி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து புகார்மனு அளித்துள்ளனர். மேலும், இந்த பகுதிகளில் குவாரி அமைத்து மணல் விநியோகம் செய்யப்பட்டால் ஆற்றில் பள்ளம் ஏற்பட்டு மழைக் காலங்களில் பொதுமக்கள், குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மணல் குவாரி அமைப்பதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு!

இதேபோல் அரசு மணல் குவாரி அமையும் பட்சத்தில் வரும் காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து குவாரி அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு முறையாக விசாரணை நடத்தி, மணல் குவாரியை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details