இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் காந்தாடு பகுதியில் ‘டீம் பத்மா கெமிக்கல்ஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவ்வற்றில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 900 தொழிலாளர்கள் தினந்தோறும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியான ரூ. 385யை கொடுக்காமல் ஆண்களுக்கு ரூ. 320, பெண்களுக்கு ரூ.170 என்று கொடுக்கப்படுகிறது.
'உப்பளத் தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு தலையீட வேண்டும்' - வேல்முருகன்
விழுப்புரம்: "உப்பளத் தொழிலாளர்கள் பிர்சனையில் தமிழ்நாடு அரசு தலையீட்டு தீர்வு காண வேண்டும்" என்று, தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி
பல வருடங்களாக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் நிறுவனத்தை கண்டித்து உப்பளத் தொழிலாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தியும் நிறுவன உரிமையார்கள் காதில் வாங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். மேலும் தட்டிக் கேட்கும் ஊழியர்களை தாக்கியும் வருகின்றனர். இதை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உப்பளத் தொழிலாளர்களின் பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையீட்டு தீர்வு காண வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.