விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விழுப்புரம் நகர காவல்நிலைய காவலர்கள் நேற்றிரவு அந்தப் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது, இமானுவேல், கார்த்திக் ராஜா, கார்த்திகேயன் மற்றும் கணேஷ் ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.