விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் காவலர்கள் தலைமையில் குட்கா புகையிலை பொருள்கள் சம்பந்தமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்திலிருந்து அனந்தபுரத்திற்கு வந்த வாகனம் ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட 218 கிலோ புகையிலை பொருள்கள் 18 சாக்குப் பைகளில் இருப்பது தெரியவந்தது.
விழுப்புரம்; ரூ.2,18,000 குட்கா பறிமுதல் இதையடுத்து டிரைவர் சங்கர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 218 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருள்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து, காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சங்கரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்தக் குட்கா பொருள்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? யாருக்காக கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 491 டன் குட்கா, பான்பராக் பறிமுதல் - மா சுப்பிரமணியன்