தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வேலை ஆசைக்காட்டி ரூ.51 லட்சம் மோசடி.. காவல் ஆய்வாளா் கைது! - விழுப்புரத்தில் காவல் ஆய்வாளர் கைது

விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டார்.

vpm
vpm

By

Published : Dec 1, 2022, 12:51 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய குமாரய்யா என்பவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் செல்லத்துரை, குமாரய்யா மீது விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு ஆவின் நிறுவனத்தில் தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, குமரய்யா 51 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, வேலையும் வாங்கிக் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து குமாரய்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த குமாரய்யாவை விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நேற்றிரவு (நவ.30) கைது செய்தனர்.

இதையும் படிங்க:25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்...

ABOUT THE AUTHOR

...view details