விழுப்புரம் மாவட்டம் திவானூர் அருகே வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர்,திருவண்ணாமலையில் இருந்து டாடா ஏஸி வாகனத்தில் சென்னை நோக்கிசென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம் அருகே ரூ. 3.5 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி - விழுப்புரம் அண்மைச் செய்திகள்
விழுப்புரம் : திவானூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட 3 லட்சத்து 53 ஆயிரத்து 840 ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
![விழுப்புரம் அருகே ரூ. 3.5 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி விழுப்புரம் அருகே உரிய ஆவணங்னலின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.5 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11080027-thumbnail-3x2-parimuthal.jpg)
விழுப்புரம் அருகே உரிய ஆவணங்னலின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.5 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரது வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி 3 லட்சத்து 53 ஆயிரத்து 840 ரூபாய் பணம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. உடனடியாக, பணத்தைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், திண்டிவனம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:ஊர்ந்து சென்று பதவி பெறவில்லை; நடந்து சென்று பதவி ஏற்றேன்: எடப்பாடி பழனிசாமி பதிலடி