விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களிடம் பணம், பரிசுப் பொருட்கள் பரிமாறப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படையினரும் 33 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை விக்கிரவாண்டி அருகே உள்ள கோழிபண்ணைப் பகுதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது செஞ்சியில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி நோக்கி வந்த கோவிந்தராஜன் என்பவரின் காரினை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.