தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை! - The police registered the case

விழுப்புரம்: சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Robbers break house lock
Robbers break house lock

By

Published : Jan 5, 2020, 10:21 PM IST

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது மனைவி இந்திரா வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இந்திரா தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி சென்றுவிட்டு, இன்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளார். அவர் வரும்போது வீட்டின் கதவு உடைக்கபட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை

இதனையடுத்து அவர் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்திரா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை - சேலத்தில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details