சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச பல்துறைப் பயிற்சி - villupuram road safety awarness
விழுப்புரம்: தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்துத் துறை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைப்பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையோட்டி இன்று 30-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா, விழுப்புரத்தை அடுத்த வளவனூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வளவனூர் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை, கல்வி, சுகாதாரம், 108 ஆம்புலன்ஸ், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாடு என்ஜிஓ மற்றும் சமூக வலைதளம் உள்ளிட்ட துறைகளின் விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.