கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் நதிக்கரையில் ஆண்டுதோறும் தைத்திங்கள் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் ஆற்றுத் திருவிழாவில் கார்த்திகை மகா தீபத்தன்று திருவண்ணாமலை கோயிலிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக வெளியே கொண்டு வரப்படும் மூலவர், பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதியாக மணலூர்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர் மீண்டும் திருவண்ணாமலை கோயிலுக்குள் கொண்டு செல்லப்படும் வைபம் நடைபெறுவதையொட்டி மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் தீர்த்தவாரியுடன் கூடிய ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: சென்னயில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!