தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் விழுப்புரத்தில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.எம். மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள அகவிலைப்படி தொகையை உயர்த்தி நிலுவையுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Retired Transport staffs protest
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நலச்சங்கம் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மாதாந்திர ஓய்வூதிய தொகையை பிரதி மாதம் ஒன்றாம் தேதியே வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போன்ற 'மருத்துவ காப்பீடு திட்டம்', 'குடும்ப நல பாதுகாப்பு' திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் குறைகளை போக்க மூன்று மாதத்துக்கு ஒருமுறை குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் ஆர்.சங்கரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.