மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஊரடங்கு காரணமாக உணவு, தங்குமிடமின்றி சிக்கி தவிக்கும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர். ஆ.அண்ணாதுரையை சந்தித்து திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மனு அளித்துள்ளார்.
மும்பையில் தவிக்கும் கூலித்தொழிலாளர்களை மீட்க முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மனு - rescue people from Mumbai Former DMK minister K. Ponmudi has filed a petition
விழுப்புரம்: மும்பையில் உணவு, தங்கும் இடமின்றி சிக்கி தவிக்கும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மனு அளித்தார்.
மும்பையில் தவிக்கும் கூலித்தொழிலாளர்களை மீட்க முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மனு
பின்னர் அவர் இதுகுறித்து கூறும்போது.,"ஊரடங்கு காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மும்பையில் உணவு, இருப்பிடமின்றி சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக அவர்களுக்கு உணவு, இருப்பிடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பேருந்து மூலம் அவர்களை சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
TAGGED:
பொன்முடி, மனு, ஆட்சியர்,