தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுப்பிக்கப்படும் ஆட்சியர் அலுவலகம் - அமைச்சர் ஆய்வு - விழுப்புரம் மாவட்ட கலெக்டர்

விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சீரமைக்கும் பணியினை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம்

By

Published : Aug 28, 2020, 7:00 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கரோனா ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் அச்சமயத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்துக்கு செப்டம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி வருகை தரவுள்ளார். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியினை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (ஆகஸ்ட் 28) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details