தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீசார் குவிப்பு - விழுப்புரம் மருதூர் ஏரி

விழுப்புரம் மருதூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை அவகாசம் கொடுத்தும், சிலர் வீடுகளை காலி செய்யாத நிலையில் காவல் துறை உதவியுடன் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்தினர்.

விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீசார் குவிப்பு
விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீசார் குவிப்பு

By

Published : Aug 5, 2022, 5:39 PM IST

விழுப்புரம்:தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணைப்பிறப்பித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏரி ஆக்கிரமிப்புகளில் வீடு கட்டி இருப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீசார் குவிப்பு

பலமுறை அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாகத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ள கட்டடங்களை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் காவல் துறை உதவி உடன் இடித்து வருகின்றனர்.

விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீசார் குவிப்பு

அந்த வகையில் விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் சுமார் 40 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த 400 வீடுகளை காவல் துறை உதவியுடன் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்டனம்:புனிதம் நிறைந்த ஆடி வெள்ளிக்கிழமையான இன்று விழுப்புரம் நகரில் காவல்துறை துணையோடு அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என்கிற முறையில் கோயில்களை இடிக்கும் செயல்கள் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயலாக உள்ளது எனவும்; தொடர்ந்து இந்துக்களின் கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், இதற்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பதாகவும், இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக அரசு செயல்படுவதாகவும் இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீசார் குவிப்பு

அசம்பாவிதம் நடக்காத வகையில் காலை முதலே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மருதூர் ஏரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பொள்ளாச்சி அருகே மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்!

ABOUT THE AUTHOR

...view details