கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு 56 நாள்களுக்கு மேல் கடந்துள்ளது. இதன் காரணமாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் தவித்து வருகின்றனர்.
புகைப்பட கலைஞர்களுக்கு நிவாரணம்! - புகைப்பட கலைஞர்களுக்கு நிவாரணம்
விழுப்புரம்: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு அச்சங்கத்தின் சார்பாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
புகைப்பட கலைஞர்களுக்கு நிவாரணம்!
இந்நிலையில் விழுப்புரம் நகரத்தில் உள்ள 300 வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களின் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி சங்கர் உள்ளிட்டோர் வழங்கினர். அப்போது தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து புகைப்பட கலைஞர்கள் நிவாரண பொருள்களை பெற்று சென்றனர்.
இதையும் படிங்க:காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்!