விழுப்புரம்: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, அதனைத் தீவிரமாகச் செயல்படுத்தினார்.
இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 4000 நிவாரண நிதி இரு தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
முதல் கட்டமாக ரூ.2000 கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் (ஜூன் 3) முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார். இத்துடன் 14 வகை மளிகைப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி, கந்தாடு, மரக்காணம் பகுதியில் ரூபாய் இரண்டாயிரம் நிவாரண தொகை, 14 பொருள்கள் அடங்கிய மளிகை நிவாரண பொருள்களை சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொதுமக்களுக்கு வழங்கினார்.
கூட்டுறவுத் துறை செயலாளர் வெங்கடேசன் மேலும் மரக்காணம் கூட்டுறவுத் துறை செயலாளர் வெங்கடேசன், முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ. 10,000 காசோலையைச் சிறுபான்மையினர் துறை அமைச்சரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மரக்காணம் வட்டாட்சியர் உஷா, துறை சார்ந்த அலுவலர்கள், திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மூன்றாம் அலை: கரோனா வைரசை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி!