விழுப்புரம்மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி ரகோத்தமன். இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருவெண்ணெய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் ரூபாய் 30 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
விவசாயி ரகோத்தமன் கடனை அடைக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜனவரி.3) காலை அவருக்கு ஒரு தொலைபேசி வந்துள்ளது. அந்த தொலைபேசியில் எதிர் முனையில் ஒரு பெண் பேசியுள்ளார். பேசும் அந்தப் பெண் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றும், தாங்கள் இந்தியன் வங்கியில் பெற்ற கடனை ஏன் செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு விவசாயி நான் கடன் பெற்றது இந்தியன் வங்கியில், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டபோது விவசாயியைத் தரக்குறைவாக அந்த எதிர்முனையிலிருந்த பெண் பேசிய ஆடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.