விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள சொக்கம்பட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் சுந்தரமூர்த்தி - குணசுந்தரி தம்பதியினர். சுந்தரமூர்த்தியின் நண்பரான மகேந்திரகுமார் குணசுந்தரியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துவந்தார். இதையறிந்த சுந்தரமூர்த்தி, 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகேந்திரகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருமணத்தை மீறிய உறவு: கணவருக்கு ஆயுள் தண்டனை - vilupuram court judgement
விழுப்புரம்: மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த நண்பரை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
vilupuram
அப்போது ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேந்திரகுமாரை குத்தியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க:கம்பம் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - தாய், சகோதரர் கைது!