தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி! - மக்களவைத் தொகுதி

விழுப்புரம்: அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மையத்தில் மே 23ம் தேதி காலை 8 மணிக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Ready for vote count in viluppuram

By

Published : May 22, 2019, 1:16 PM IST

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மையத்தில் மே 23ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இப்பணியில் ஆயிரம் பேர் ஈடுபட்ட உள்ளனர்.

இதற்காக அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன்கள் அனுமதிக்கப்படாது, வாக்கு எண்ணிக்கை நிறைவாக விவிபட் சாதனத்தின் வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்டு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

பாதுகாப்பு பணியில் நான்கு டிஎஸ்பிக்கள்,11 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 500 போலீசார் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் தொகுதியில் 11 லட்சத்து 28 ஆயிரத்து 998 வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்படத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details