தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவிக்குமார் எம்பி தத்தெடுத்த கிராமத்தில் அலுவலர்கள் ஆய்வு!

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தத்தெடுத்த கிராமத்தை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ravikumar

By

Published : Oct 21, 2019, 9:38 AM IST

சுகாதாரம், பசுமை ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை வசதிகளைக்கொண்ட மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்காக ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ என்ற கிராம தத்தெடுப்புத் திட்டம் 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பெண்கள், முதியோர், குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

காந்தலவாடி ஊராட்சியில் அலுவலர்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட காந்தலவாடி ஊராட்சியை மத்திய அரசின் ”சான்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா” திட்டத்தின் கீழ் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தத்தெடுத்துள்ளார். அதன்படி அந்த பகுதியில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொள்ளும் விதமாக தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்கள் கிராமம் முழுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகளற்ற மலை கிராமங்கள்!

ABOUT THE AUTHOR

...view details