விழுப்புரம்:ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதாக எழுந்த புகார் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்துள்ளது. அது தொடர்பாக, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், 'திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் நலன் மீது மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாக இருந்ததை அறிந்து அது தொடர்பாக ஒரு அறிக்கையைத் தமிழ்நாடு அரசிற்கு சமர்ப்பித்து இருந்தோம்.